IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!

Hardik Pandya

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது சீசன் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் ஆனது, முதல் முறையாக இந்தியாவில் நடைபெறாமல் டிசம்பர் 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் லக்னோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளது.

இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் விளையாட போகும் 10 அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் எந்தந்த வீரர்களை  தக்கவைப்பது, யாரை விடுப்பது என்கிறப் பட்டியலை நவம்பர் 26 ஆம் தேதிக்குள், அதவாது நாளை மாலை 4 மணிக்குள் வெளியிட வேண்டும்.

இதற்கிடையில் ஏலத்திற்கு முன்னதாக சில அணிகள் வீரர்களை டிரேடிங் முறை மூலம் வாங்கியும் விற்றும் வருகின்றன. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக  விளையாய ஆவேஷ் கானை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது.

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: மணிப்பால் டைகர்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.!

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக தனது முன்னாள் அணியான மும்பை இந்தியன்ஸில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு வாங்கியது.

அவர் குஜராத் அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்டு முதல் தொடரிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதனையடுத்து 2023ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அணியை இறுதி போட்டிக்குக் கொண்டு சென்றார். இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய குஜராத் அணித் தோல்வியை தழுவியது.

இருந்தாலும் தான் பங்கேற்ற இரண்டு தொடர்களிலும் தனது அணியை இறுதிப்போட்டி வரைக்கொண்டு சென்ற கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றார். ஒரு வேலை ஹர்திக் பாண்டியவை மும்பை அணி எடுத்துக்கொண்டால், ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன் ஒருவர் டிரேடிங் மூலம் அணி மாறுவது இதுவே முதல் முறையாகும்.

2024 டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்லும்.! மைக்கேல் வாகன் கணிப்பு..

இவ்வாறு டிரேடிங் மூலம் ஒரு வீரர் தனது அணியில் இருந்து மற்றொரு அணிக்கு செல்லும்போது, அந்த அணி அதே மதிப்புள்ள மற்றொரு வீரரை எதிரணிக்குத் தரவேண்டும். இல்லையெனில் தாங்கள் மாற்றும் வீரரின் விலைப் போக மீதியைப் பணமாகக் கொடுக்க வேண்டும். இப்போது மும்பை இந்தியன்ஸ் கையில் 0.05 கோடி மட்டுமே உள்ளது.

கூடுதலாக, இந்த முறை ஏலத்தில் அனைத்து பத்து உரிமையாளர்களும் ரூ.5 கோடி பெறுகின்றனர். இப்போது ஹர்திக்கைப் பெறுவதற்கும் மீதம் உள்ள ரூ. 10 கோடியைப் பெற, மும்பை அணி சில வீரர்களை விடுவிக்க வேண்டும். ஒருபுறம் ஹர்திக் பாண்டியாவிற்கு ஈடாக மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா அல்லது வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் குஜராத் அணியில் இணைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்