ஐபிஎல் 2024: குஜராத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஹைதராபாத்
IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 163 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
அகமதாபத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 12வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது.
ஆரம்பம் முதலே ஹைதராபாத் அணி வீரர்கள் மிதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தன. அந்த அணியின் அபிஷேக் சர்மா 29 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.
அதே போல மற்றொரு வீரர் அப்துல் சமதும் 29 ரன்களை எடுத்தார். அணியின் மற்ற வீரர்கள் யாரும் ரன்களை குவிக்கவில்லை. இதையடுத்து ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் மோகித் சர்மா 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்களை கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அந்த அணியின் அஸ்மத்துல்லா உமர்சாய், உமேஷ் யாதவ், ரஷித் கான், நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினார்கள். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கவுள்ளது.