IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..?

TATA IPL

IPL 2024 : இந்தியாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது வருகிற மார்ச் -22 ம் தேதி தொடங்கவுள்ளது. IPL 2024 தொடர் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்புகளுடன் இருக்கின்றனர். மேலும், இந்த தொடரின் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது.

Read More :- ஜாம்பவான் கர்ட்னி வால்ஷின் 23 வருட சாதனையை முறியடித்த நாதன் லியான்..!

கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 16 சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த 16 சீசனில் 5 முறை சென்னை அணியும், 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 முறை கொல்கத்தா அணியும், 2  முறை ஹைதராபாத் அணியும், 1 முறை ராஜஸ்தான் அணியும், 1 முறை குஜராத் அணியும் கோப்பையை வென்றுள்ளனர்.

இந்த 16- சீசனில் ஒரு அணியாக அதிக வெற்றிகளை பெற்ற பட்டியலின் முதலிடத்தில் மும்பை அணி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 2008 முதல் தற்போது வரை மொத்தம் 247 போட்டிகளில் விளையாடி 138 வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும், 105 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இதனால், மும்பை அணியின் வெற்றி சதவீதம் 55.87 % ஆக உள்ளது.

Read More :- என் ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியாதாது இதுதான்..  – மனம் திறந்த ஹர்திக் பாண்டியா.

மும்பை அணிக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் சென்னை அணி இடம் பெற்றுகிறது. ஐபிஎல் தொடரில் 2008 முதல் தற்போது வரை சென்னை அணி மொத்தம் 225 போட்டிகளில் விளையாடி 131 வெற்றிகளை பெற்றுள்ளனர். வெறும் 91 போட்டிகளில் மட்டுமே சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. ஒரே ஒரு போட்டி மட்டும் சென்னை அணிக்கு ட்ரா ஆகி உள்ளது. இதனால், சென்னை அணியின் வெற்றி சதவீதம் 58.22 % ஆக உள்ளது.

அதிக வெற்றிகள் பெற்ற முதல் 5 அணிகள் :

  • மும்பை இந்தியன்ஸ் – 138 வெற்றிகள்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 131 வெற்றிகள்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 119 வெற்றிகள்
  • பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – 114 வெற்றிகள்
  • டெல்லி கேபிட்டல்ஸ் – 105 வெற்றிகள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்