ஐபிஎல் 2024 ஏலம்: எந்தெந்த வீரர்களுக்கு எவ்வளவு விலை..! 333 பிளேயர்களின் முழு பட்டியல் வெளியீடு!

IPL 2024 Auction

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் முதல் ஐபிஎல் ஏலம் இதுவாகும். 2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்திற்கான வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. அதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 333 பேர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடருக்கான இந்த மினி ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 333 வீரர்களில் 214 பேர் இந்தியர்கள், 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் மீதமுள்ள இருவர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த மினி ஏலத்தில் பங்கேற்க கூடிய ஸ்டார் பிளேயர்களின் அடிப்படை விலையையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல்லில் உள்ள 10 அணி உரிமையாளர்கள் இணைந்து அதிகபட்சமாக 77 பிளேர்களை எடுக்கவுள்ளனர், அவற்றில் 30 வெளிநாட்டு வீர்ரகள் ஆவர்.  இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி தான் அதிகமாக 12 இடங்களை நிரப்பும் அணியாகும். அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அதிக பணத்துடன் (38.15 கோடி) ஐபிஎல் மினி ஏலத்தில் நுழைகிறது. ஐபிஎல் 2024 ஏலத்தில் அடிப்படை விலை 2 கோடி ரூபாய் என 23 வீரர்கள் நிர்ணயித்துள்ளனர்.

விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்!

இதுபோன்று, 13 வீரர்களின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய் ஆகும். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், ஜோஷ் இங்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஷான் அபோட் ஆகியோர் அடிப்படை விலை 2 கோடி ரூபாயில் உள்ளனர்.

இவர்களுடன் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல வீரர்கள் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்தில் பங்கேற்கின்றனர். உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளார்.

அடிப்படை விலை ரூ.2 கோடி :

ஹாரி ப்ரூக், டிராவிஸ் ஹெட், ரிலீ ரோசோவ், ஸ்டீவ் ஸ்மித், ஜெரால்ட் கோட்ஸி, பாட் கம்மின்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் இங்கிலிஸ், லாக்கி பெர்குசன், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், முஜீப் ரஹ்மான், அடில் ரஷீத், அப்சென் வான்ட்சென், ராஸ்ஸி, ரஷீத், ராஸ்ஸி ஜேமி ஓவர்டன், டேவிட் வில்லி, பென் டக்கெட், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோரும், இந்திய வீரர்களான ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இந்திய வீரர்கள் 2 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.

அதிக இடங்கள் நிரப்பும் அணிகள்: 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 இடங்கள், அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 6 இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. ஏலத்திற்கு முன்னதாக அதிக தொகை வைத்திருக்கும் அணியாக குஜராத் டைட்டன்ஸ் உள்ளது.

அவர்களிடம் ரூ.38.15 கோடி மீதமுள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத் (ரூ.34 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ.32.7 கோடி) மற்றும் சென்னை (ரூ.31.4 கோடி) ஆகிய அணிகள் உள்ளன. மேலும், ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாய் நேரப்படி மதியம் 1 மணிக்கு, இந்திய நேரப்படி மாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்