IPL 2023 RCB vs KKR: பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்.!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB-KKR போட்டியில் டாஸ் வென்று பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு.

ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது.

காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ள நிலையில், நிதிஷ் ராணா தலைமையில் களமிறங்கும் கொல்கத்தா அணியில் காயம் காரணமாக சமீபத்தில் ஷகிப் அல் ஹசன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக ஜேசன் ராய் அணியில் இணைந்துள்ளார்.

கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றிக்கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணியைப் பொறுத்தவரை தனது முதல் போட்டியில், மும்பை அணியை வென்று முழு உத்வேகத்துடன் களமிறங்குகிறது. மேலும் புள்ளிப்பட்டியலிலும் பெங்களூர் அணி 3-வது இடத்தில் இருக்கிறது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸி (C), தினேஷ் கார்த்திக்(W), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ண் சர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

கொல்கத்தா அணி: மந்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ்(W), நிதிஷ் ராணா(C), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire