ஐபிஎல் 2023 தொடரின் RR-SRH இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. ஜாஸ் பட்லர்(54 ரன்கள்), ஜெய்ஸ்வால்(54 ரன்கள்) மற்றும் சாம்சன் (55 ரன்கள்) ஆகியோரின் அதிரடியுடன் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி சார்பில் ஃபரூக்கி 2 விக்கெட்களும், நடராஜன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, முதல் ஒவரிலேயே 2 விக்கெட்கள் விழுந்து அதிர்ச்சி காத்திருந்தது. போல்ட் வீசிய முதல் ஒவரில் அபிஷேக் சர்மா மற்றும் த்ரிபாதி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஹைதராபாத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்தது.
முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்களை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் ராஜஸ்தான் அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி சார்பில் சாஹல் 4 விக்கெட்களும், போல்ட் 2 விக்கெட்களும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…