IPL 2023: ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

Default Image

ஐபிஎல் 2023 தொடரின் RR-SRH இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. ஜாஸ் பட்லர்(54 ரன்கள்), ஜெய்ஸ்வால்(54 ரன்கள்) மற்றும் சாம்சன் (55 ரன்கள்) ஆகியோரின் அதிரடியுடன் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி சார்பில் ஃபரூக்கி 2 விக்கெட்களும், நடராஜன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, முதல் ஒவரிலேயே 2 விக்கெட்கள் விழுந்து அதிர்ச்சி காத்திருந்தது. போல்ட் வீசிய முதல் ஒவரில் அபிஷேக் சர்மா மற்றும் த்ரிபாதி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஹைதராபாத்  தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்தது.

முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்களை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் ராஜஸ்தான் அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி சார்பில் சாஹல் 4 விக்கெட்களும், போல்ட் 2 விக்கெட்களும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்