ஐபிஎல் 2023 பிளேஆஃப்ஸ்… புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் அணிகள்.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் பிளேஆஃப்-இல் குஜராத்-சென்னை அணிகளும், லக்னோ-மும்பை அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31இல் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. எந்த வருடமும் இல்லாத அளவு நடப்பு ஐபிஎல் தொடரில் பல சஸ்பென்ஸ், இறுதி ஓவர் த்ரில் ஆட்டங்கள் என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் வெற்றிகரமாக லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

Playoffs2023 [Image-Twitter/@IPL]

கடைசி லீக் சுற்று ஆட்டம் வரை ஐபிஎல் பிளேஆப்-க்கு நான்காவதாக செல்லும் அணி எது என்பது தெரியாமல் பரபரப்பாகவே சென்றது. இறுதியாக குஜராத், சென்னை, லக்னோ, மற்றும் மும்பை அணிகள் பிளேஆப்-க்கு தகுதி பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் ஐபிஎல் பிளேஆப் சுற்றுக்கு எப்படி தகுதி பெற்றது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ்(GT): 

நடப்பு சாம்பியன் குஜராத் அணி 14 போட்டிகளில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளைப் பெற்று பிளேஆப்-க்கு முதல் அணியாக முன்னேறியது. கடந்த ஆண்டு எப்படி சாம்பியன் அணியாக போனதோ அப்படியே இந்த வருடமும் குஜராத் அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

GTPlayoffs1 [Image-Twitter/@GT]

ஹர்டிக் பாண்டியா தலைமையின் கீழ் கடந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணி, சிறப்பாக விளையாடி வருகிறது என்றே கூறலாம். ஓப்பனிங்கில் சஹா மற்றும் கில் நல்ல தொடக்கம் கொடுத்து வருகின்றனர். பந்துவீச்சில் ஷமி, மோஹித் சர்மா, ரஷீத் கான், நூர் அஹமது மிரட்டல் பந்து வீச்சால் எதிரணியை திணறடித்து வருகின்றனர்.

பிளேஆப் சுற்றில் முதல் தகுதிப் போட்டியில் குஜராத் அணி, சென்னையை நாளை எதிர்கொள்கிறது. சென்னை-குஜராத் இடையேயான போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை அணி இதுவரை குஜராத்துக்கு எதிராக மோதிய 3 போட்டிகளில் ஒருமுறை கூட வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குஜராத் அணி முதன்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK):

நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்வி மற்றும் 1இல் முடிவு இல்லாமல் 17 புள்ளிகளைப்(NRR +0.652) பெற்று பிளேஆப்-க்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றது. கடந்த 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு சற்று மோசமாகவே அமைந்தது.

CSK Playoff 2 [Image-Twitter/@CSK]

அதிலிருந்து மீண்டு வந்து இந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி, ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தை பெற்றுள்ளது. சீசனின் ஆரம்பத்தில் சென்னை அணி பந்துவீச்சு, பீல்டிங்கில் சொதப்பினாலும் இறுதியில் பீல்டிங் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

கேப்டன் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் என கூறி வந்தாலும் மற்றும் அணியில் முக்கிய வீரர்கள் காயம் என அணியிலிருந்து வெளியேறினாலும் தங்களுடைய சிறப்பை வெளிப்படுத்தி சென்னை அணி பிளேஆப்-க்கு முன்னேறியுள்ளது. இதுவரை சென்னை அணி தான் விளையாடிய 14 சீசன்களில் 12 முறை பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தான் வெல்லாத குஜராத் அணியுடன் இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் தகுதி சுற்று போட்டியில் நாளை விளையாடுகிறது. பழைய வரலாறை சென்னை அணி மாற்றிக்காட்டுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கமுடியும்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்(LSG):

கடந்த ஆண்டு அறிமுகமான இரு அணிகளில் ஒன்றான லக்னோ, கடந்த முறையை போலவே இந்த ஆண்டும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 14 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்வி மற்றும் 1இல் முடிவு இல்லாமல் 17 புள்ளிகளைப்(NRR +0.284) பெற்றுள்ளது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியைக் காட்டி வரும் லக்னோ பந்துவீச்சிலும் சம பலத்துடன் இருக்கிறது.

LSG Playoff3 [Image- Twitter/@LSG]

கடந்த முறை 2022இல் ராஜஸ்தானுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய லக்னோ அணி இம்முறை எப்படியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை வெல்ல முழு உத்வேகத்துடன் களமிறங்குகிறது. பிளேஆப்சில் வெளியேற்று சுற்று போட்டியில் மும்பை அணியுடன் வரும் 24 இல் மோதுகிறது.

இரு அணிகளும் வெளியேற்று சுற்று போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன. இதில் மும்பை அணியை, லக்னோ அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ்(MI):

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் பும்ரா, ஆர்ச்சர் உள்ளிட்ட வீரர்களின் காயம் போன்ற சில சறுக்கல்களை சந்தித்தாலும் தட்டுத் தடுமாறி அடுத்தடுத்த போட்டிகளில் வென்று பிளேஆப்-க்குள் இறுதி அணியாக நுழைந்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசன் மும்பை அணிக்கு சரிவைத்தந்தாலும் இந்தமுறை மீண்டு எழுந்துள்ளது என்றே கூறலாம்.

MI Playoff4 [Image- Twitter/@mipaltan]

விளையாடிய 14 போட்டிகளில் 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகளைப் பெற்றது, அதே நேரத்தில் பெங்களூரு அணி, நேற்று குஜராத் அணியுடன் அடைந்த தோல்வியின் மூலம் பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறியது. மேலும் மும்பை அணி இதுவரை 9 முறை பிளேஆப் சுற்றுகளில் நுழைந்து அதில் 5 முறை வென்ற ஒரே அணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தவிக்கும் மும்பை அணி, லக்னோ அணியுடன் வெளியேற்று சுற்று போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 24ஆம் தேதி மோதுகிறது. இதில் இதுவரை வெற்றி பெறாத லக்னோ அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிளே ஆப் சுற்றில் முதலாவது தகுதி சுற்று போட்டியில் வெல்லும் அணி நேரடியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். அதேநேரத்தில் வெளியேற்று சுற்று போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் மோதும். இதில் வெல்லும் அணி இரண்டாவது அணியாக இறுதிக்குள் நுழையும்.

Published by
Muthu Kumar

Recent Posts

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?

சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…

1 hour ago

“மதுக்கடைகளை மூட வேண்டும்” தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…

3 hours ago

இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

4 hours ago

IND vs NZ : தொடரும் தோல்வி! இந்தியாவை வொயிட்-வாஷ் செய்த நியூசிலாந்து அணி!

மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…

4 hours ago

சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. “கங்குவா” சிறப்பு காட்சி உண்டு.! எங்கு தெரியுமா?

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…

5 hours ago

சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள் – போக்குவரத்து நெரிசல்!

சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி…

6 hours ago