IPL 2023 : PBKS vs GT இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்.?
ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறவிருக்கும் 18-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 7:30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஷிகர் தவான் தலைமையில் விளையாடவுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 197 ரன்கள் குவித்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, ஹைதராபாத் அணியுடனான மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தழுவியது.
மேழும், நடப்பு சாம்பியனான குஜராத் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடவுள்ளது. சென்னை அணியுடனான முதல் போட்டியில் வெற்றியைக் கண்ட குஜராத், தனது மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதனால் 4 புள்ளிகளை பெற்று பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் ஃபார்ம் குஜராத்தின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் vs குஜராத் : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.
பஞ்சாப் கிங்ஸ் :
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா/பானுகா ராஜபக்சே, சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், நாதன் எல்லிஸ்/ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
குஜராத் டைட்டன்ஸ் :
விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், ஜோசுவா லிட்டில்