IPL 2023: தொடரும் மும்பை அணியின் முதல் போட்டி தோல்வி; பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

Default Image

ஐபிஎல்-இல் MI-RCB அணிகளுக்கிடையேயான போட்டியில், பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பைஇந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி, திலக் வர்மா(84* ரன்கள்) அதிரடியால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் கரண் சர்மா 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 172 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் ஆரம்பம் முதலே, கோலி(76* ரன்கள்) மற்றும் டுபிளெஸ்ஸி (73 ரன்கள்) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கினர். இதனால் 16.2 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 172 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்