ஐபிஎல் 2023: நாளைய போட்டியில் புதிய சாதனை படைக்க உள்ளார் எம்.எஸ்.தோனி!

MS DHONI

ஐபிஎல் தொடரின் நாளைய இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் எம்.எஸ்.தோனி.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்த நிலையில், நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மாலை 7.30 மணியளவில் இப்போட்டி தொடங்குகிறது.

சென்னை அணி இதுவரை 10 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி ஒரு சாதனையை படைத்துள்ளது. மறுபக்கம், விளையாடிய இரண்டு சீசனில் ஒரு பட்டத்தையும் வென்று, தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குஜராத் அணி.நாளைய இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் பெரும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக மோதும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சமயத்தில் ஐபிஎல் தொடரின் நாளைய இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி. அதாவது, குஜராத்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார் எம்எஸ் தோனி. CSK-ஐ ஐந்து முறை சாம்பியனாக்குவதன் மூலம் இந்த தருணத்தை அவரால் சிறப்பாக்க முடியும்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தோனி 15 போட்டிகளில் 104 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால்,185.71 என்ற வியக்கத்தக்க ஸ்ட்ரைக் ரேட்டுடன் 8 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்த ஆண்டு சிஎஸ்கேயின் ஃபினிஷராக இருந்துள்ளார். எனவே,  புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் எம்எஸ் தோனி நாளை வரலாற்றில் 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்