IPL 2023: கடைசி ஓவர் த்ரில்; சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.!
ஐபிஎல் தொடரில் CSK vs LSG போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்கமே அதிரடி காட்டத்தொடங்கியது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 57 ரன்களும் டெவோன் கான்வே 47 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் மார்க் வுட் மற்றும் ரவி பிஷ்ணோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது. ஓப்பனிங் இறங்கிய மயர்ஸ்(53 ரன்கள்) அதிரடியாக விளையாடி அரைசதமடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு ஓப்பனிங் வீரர் ராகுல் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழ பூரன் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்து, முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். கடைசிக்கட்டத்தில் சென்னை அணி வீரர்கள் சில ஒய்டு மற்றும் நோபால் வீச ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.
முடிவில் லக்னோ அணிக்கு 20ஆவது ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 15 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி லக்னோ அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணி தரப்பில் மொயீன் அலி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.