IPL 2023: DC vs GT போட்டி; குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்.!
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் DC-GT இடையேயான போட்டியில், டாஸ் வென்று குஜராத் அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் டெல்லியின் அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதுகின்றன. குஜராத் அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியுடன் வெற்றியும், டெல்லி அணி தனது முதல் போட்டியில் லக்னோ அணியுடன் தோல்வியும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் டெல்லி அணியும், வெற்றிக்கணக்கை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் முதல் போட்டியில் வெற்றிஅடைந்த முழு உத்வேகத்தில் குஜராத் அணியும் இன்று களமிறங்குகின்றன. டாஸ் வென்று குஜராத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா(w), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(c), டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்
டெல்லி கேபிட்டல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (c), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ஃபராஸ் கான் (w), அக்சர் படேல், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே