ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் CSK-LSG இடையேயான போட்டியில், டாஸ் வென்று லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்றன. சென்னை அணி, தனது முதல் போட்டியில் குஜராத் அணியுடன் தோல்வியும், லக்னோ அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியுடன் வெற்றியும் பெற்று இன்று களமிறங்குகின்றன.
சென்னை அணி, கடந்த முறை 2022இல் லக்னோ அணியுடன் மோதியதில் தோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் சென்னை அணி களமிறங்குகிறது. லக்னோ அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் அடைந்த வெற்றியுடன் முழு உத்வேகத்தில் இன்றைய போட்டியையும் வெல்லும் நோக்கில் இறங்குகிறது.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி: டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(W/C), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஹங்கர்கேகர்
லக்னோ அணி: கேஎல் ராகுல்(C), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன்(W), ஆயுஷ் படோனி, மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான்
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…