IPL 2023: இரண்டே நாளில் கோலியின் சாதனையை முறியடித்த வார்னர்.!

Warner Broke KohliRecord

ஐபிஎல் தொடர்களில் அதிக முறை 500+ ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கேப்டன் டேவிட் வார்னர் 86 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது ஐபிஎல் சீசன்களில் அதிக முறை 500க்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளவர் என்ற சாதனையை வார்னர்(7 முறை) படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் அவர் அடித்த 86 ரன்களை சேர்த்து நடப்பு ஐபிஎல் தொடரில் வார்னர் 516 ரன்கள் குவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் விராட் கோலி ஐபிஎல் சீசன்களில் 6 முறை 500க்கும் அதிகமான ரன்களை அடித்து அதிகமுறை 500+ ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார்.

தற்போது வார்னர் அந்த சாதனையை 2 நாட்களில் முறியடித்திருக்கிறார். நேற்றைய போட்டியில் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்