#MIvLSG : மீண்டும் மீண்டும் தோல்வி.! சொந்த மண்ணில் லக்னோவிடம் வீழ்ந்தது மும்பை.!

Default Image

நடப்பு ஐபிஎல் தொடர்ந்து 8 வது தோல்வியை மும்பை அணி பெற்றுள்ளது. லக்னோ அணி  36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இறுதி வரையில் களத்தில் இருந்தார்.

இதனை தொடர்ந்து 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 39 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த தொடர் தோல்வி மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி ஆரம்பம் முதல் தொடர்ந்து 8 மேட்சுகள் தோற்றுள்ளது எனும் மோசமான சாதனையை மும்பை அணி படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Union minister Amit shah visit Anantnag dt hospital
JK Pahalgam Terror Attack
CSK - CEO
PM Modi Soudi to Delhi visit
thirumavalavan amit shah
Kashmir Attack