ஐபிஎல் 2022: முதல் போட்டி தோல்வியை தொடர்ந்து கேன் வில்லியம்சனுக்கு அபராதம்..!

Published by
murugan

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

வில்லியம்சன் ரூ.12 லட்சம் அபராதம்:

ஐபிஎல் 2022 இன் 5வது போட்டி நேற்று புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது. ஐதராபாத் அணி தனது முதல் போட்டியில்  தோல்வியை அடைந்துள்ளது. அதே சமயம் போட்டி முடிந்ததும் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டது. ராஜஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் ஓவரை வீசத் தவறி விட்டது. விதிகளின்படி ஒரு அணி குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஓவரை வீசத் தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

ராஜஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி :

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தவிர, தேவ்தத் படிக்கல் 41, ஜோஸ் பட்லர் 35, ஷிம்ரோன் ஹெட்மையர் 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 57 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பின் வந்த வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களில் விளையாடினார். ராஜஸ்தான் அணி சார்பில்  சாஹல் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

 

Published by
murugan

Recent Posts

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

21 minutes ago

பாஜக தலைவர் பொறுப்பேற்பு…, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் பதில்.!

சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…

29 minutes ago

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…

2 hours ago

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

2 hours ago

“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…

2 hours ago

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…

3 hours ago