IPL 2022 : புதிய சாதனை படைத்த ஹைதராபாத் அணியின் வீரர் உம்ரான் மாலிக்…!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 46 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறாவிட்டாலும், இந்த அணியின் வீரரான உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்துள்ளார்.
லாக்கி பெர்குசன் முன்னதாக 153.9 வேகத்தில் பந்து வீசி இந்த சேஷனின் அதிவேக பந்து வீச்சாளர் எனும் பெயரை பெற்றிருந்தார். தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக உம்ரான் மாலிக் 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார்.
இதனையடுத்து முன்னதாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனின் சாதனையை இவர் முறியடித்து இந்த சீஸனின் அதி வேக பந்து வீச்சாளர் எனும் பெயரை பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025