ஐபிஎல் 2022: ஏலத்திற்கு ரூ.90 கோடி நிர்ணயித்த பிசிசிஐ, 4 தக்கவைப்பு..!

Default Image

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்காக 10 அணிகளுக்கும் அதிகபட்ச ஏல தொகையாக தலா ரூ.90 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு புதிய அணிகள் – லக்னோ மற்றும் அகமதாபாத் – அடுத்த சீசனில் இருந்து சேர்க்கப்பட்டுள்ளன.

Cricbuzz இன் அறிக்கையின்படி, BCCI அனைத்து உரிமையாளர்களுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. அதில் தற்போதுள்ள 8 அணிகள் அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் இரண்டு புதிய அணிகள் ஏலத்திற்கு முன் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டவர்களைத் தவிர மூன்று வீரர்களைத் தேர்வு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால், மொத்த 90 கோடி தொகையில்  இருந்து ரூ.42 கோடி குறைக்கப்படும். மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் ரூ.33 கோடி குறைக்கப்படும். இரண்டு வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் ரூ.24 கோடி கழிக்கப்படும்.  ஒரு அணி ஒரு வீரரை மட்டும் தக்கவைத்துக் கொள்ள விரும்பினால், ரூ.14 கோடியை இழக்க நேரிடும். தக்கவைக்கப்படாத ஒவ்வொரு வீரருக்கும் 4 கோடி ரூபாய் செலவாகும்.

மேலும், வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் ஒவ்வொரு வீரரின் சம்பளம் பிளேயர் 1-க்கு ரூ.16 கோடி, பிளேயர் 2-க்கு ரூ.12 கோடி, பிளேயர் 3-க்கு ரூ.8 கோடி மற்றும் பிளேயர் 4-க்கு ரூ.6 கோடி என வாரியம் அனுமதித்துள்ளது. 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் பிளேயர் 1-க்கான ரூ.15 கோடியாகவும், பிளேயர் 2-க்கு ரூ.11 கோடியாகவும், பிளேயர் 3-க்கு 7 கோடியாகவும் இருக்கும். இரண்டு வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் பிளேயர் 1-க்கு ரூ.14 கோடியும், பிளேயர் 2-க்கு ரூ.10 கோடியும் சம்பளம் கிடைக்கும்.

ஒரு அணி ஒரு வீரரை மட்டும் தக்க வைத்துக் கொண்டால் ஒரு சீசனில் அவருக்கு ரூ.14 கோடி செலுத்த வேண்டும். வீரர்களின் சம்பளம் மேலே குறிப்பிட்டதை விட அதிகமாக இருந்தால், ஏல தொகையில் இருந்து கழிக்கப்படும் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதைய 8 அணிகள் மூன்று இந்தியர்களுக்கு மேல் தக்கவைக்க முடியாது. அதிகபட்சம் இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். மேலும், தற்போதுள்ள எட்டு அணிகளும் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான காலக்கெடு 1 நவம்பர் 2021 முதல் நவம்பர் 30, 2021 வரை இருக்கும்.

அதன்பிறகு 2 புதிய அணிகளுக்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான காலக்கெடு டிசம்பர் 1 முதல் 25 டிசம்பர் 2021 வரை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்