IPL 2021,RR vs MI:இன்று மும்பை அணியை நேருக்கு நேர் மோதும் ராஜஸ்தான்…!

RR vs MI:இன்றைய 51 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சனிக்கிழமை அபுதாபியில் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற தனது கடைசி ஆட்டத்தில் அட்டவணையில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில்,ஆர்ஆர் அணி மற்றொரு பெரிய சவாலை சந்திக்கவுள்ளது.அதாவது,ஐபிஎல்லின் 51 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியானது,மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஏனெனில்,இரு அணிகளும் பிளேஆஃப்களில் மீதமுள்ள ஒரு இடத்திற்காக போராடுகின்றன.
இந்த போட்டியானது,இன்று இரவு 7.30 மணிக்கு சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக,இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்புகளில் 23 முறை மோதியுள்ளன,அதில்,மும்பை இந்தியன்ஸ் 12 போட்டிகளில் வெற்றி பெற்றது.ராஜஸ்தான் ராயல்ஸ் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் முடிவு (no result) இல்லாமல் முடிந்தது.
சாத்தியமான ஆர்ஆர் XI அணி: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c & wk), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, ஆகாஷ் சிங்/ஸ்ரேயாஸ் கோபால், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்.
சாத்தியமான மும்பை XI அணி: ரோஹித் சர்மா (c), குயின்டன் டி காக் (wk), சூர்யகுமார் யாதவ், சauரப் திவாரி, ஹர்திக் பாண்ட்யா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.