ஐபிஎல் 2021: “ரிஷப் பந்த், கடந்த 4 மாதங்களில் சிறப்பாக விளையாடும் அளவிற்கு வளர்ந்துள்ளார்”-பிரையன் லாரா..!

Default Image

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின்,இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், கடந்த நான்கு மாதங்களில் சிறப்பான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளார்,என்று பிரையன் லாரா கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் விக்கெட் இரண்டிலும் மாஸ் காட்டுபவர் யார் என்று கேட்டால் நமக்கு நினைவுக்கு வருபவர் நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தான்.அந்த வரிசையில் தற்போது ரிஷப் பந்த்தும் உள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் உரிமையாளர்கள், ரிஷப்பை ரூ.1.9கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர்.2017ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் T20 போட்டிகளில் ரிஷப் இந்திய அணியில் விளையாடினார்.தனது சிறப்பான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கினால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.

ரிஷப் பந்த், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

இதைப் பற்றி,பிரபல வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் பிரையன் லாரா தெரிவிக்கையில்,”ரிஷப் பந்த், கடந்த 4 மாதங்களாக விளையாட்டில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார்,டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, 23 வயதான ரிசப் பந்த் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எதிரணியில் பந்து வீசுபவர்களுக்கு சவாலாக இருக்கும் பேட்ஸ்மேனான ரிசப் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளார்.ஏனெனில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அன்ரிச் நார்ட்ஜே, ரபாடா மற்றும் ஆக்சர் படேல் ஆகியோர் கொரொனொ தொற்றின் காரணமாக விளையாட வாய்ப்பில்லாததால்,தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல்லில் ரிஷப் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்துவார்,என்று கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pradeep ranganathan dragon AJITH
tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi