RCB vs KKR, IPL 2021:இன்று நேருக்கு நேர் மோதும் ஆர்சிபி-கேகேஆர் அணிகள்…!

Published by
Edison

RCB vs KKR:ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31 ஆவது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, கொல்கத்தா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நேற்று முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.அதன்படி,துபாயில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரை ரசிகர்கள் நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேருக்கு நேர் மோதுகின்றன.

இதற்கு முன்னதாக,ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.அதில் கேகேஆர் அணி 15 முறையும், ஆர்சிபி அணி 13 முறையையும் வெற்றி பெற்றுள்ளன.இதனால் இன்றைய போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐபிஎல்லில் கடைசியாக இந்த இரு அணிகளும் விளையாடியபோது, ஆர்சிபி 204 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

KKR சாத்தியமான XI அணி: சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன், இயோன் மோர்கன் (C), ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (wk), லோக்கி பெர்குசன், சிவம் மாவி/கமலேஷ் நாகர்கோடி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.

RCB சாத்தியமான XI அணி: விராட் கோலி (c), தேவதூத் படிக்கல், ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டி வில்லியர்ஸ் (wk), ஷாபாஸ் அகமது/முகமது அசாருதீன், வானிந்து ஹசரங்கா, கைல் ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

2 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

3 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

4 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

5 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

5 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

5 hours ago