#IPL 2021: டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச முடிவு!
ஐபிஎல் தொடரின் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றை தினத்தின் இரண்டாவது போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
புள்ளி பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ராஜஸ்தான் 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுக்கும் இப்போட்டி முக்கிய போட்டியாக கருதப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (w), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷாஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன் (w/c), க்ளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், ராகுல் தேவாடியா, ஜெய்தேவ் உனட்கட், சேத்தன் சகரியா, முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.