IPL2021: பிப். 18ம் தேதி ஏலம் நடைபெறும் – பிசிசிஐ தகவல்
2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப் 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் மைதானத்தில் ரசிகர்களின்றி, 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், அமீரகத்தில் நடைபெற்று வெற்றிகராக நிறைவடைந்தது. தற்போது, 2021-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அதன்படி, நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அந்தந்த அணியினர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் பிப். 4ம் தேதிக்குள் டிரேடு முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் வீரர்களுக்கான ஏலம் நடத்தப்படும். ஆனால் இதற்கான இடம் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது. ஐபிஎல் ஏலம் தொடங்கவுள்ளதால், விடுவிக்கப்பட்ட வீரர்களை எந்த அணி வாங்கப்போகிறது என்பது குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.