ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் எனவும், செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் முதல் போட்டி தொடங்கும் எனவும் மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக வருடாவருடம் கோடை காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்தாண்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன.
தற்போது, ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லை என்பதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த ஐபிஎல் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
முன்னதாக, போட்டிகள், செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 8ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று மும்பையில், ஐபிஎல் நிர்வாக குழு ஆலோசனை மேற்கொண்டது. அந்த ஆலோசனை முடிவில்,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் எனவும், செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் முதல் போட்டி தொடங்கும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கும், ஐபிஎல் போட்டிகள், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…