பெங்களூரை வெளியே தள்ளி, இறுதிப்போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பை ஹைதராபாத் அணி பெற்றது.
ஐபிஎல் தொடர் 13-வது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் பிளே-ஆப் 2-வது சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – கோஸ்வாமி களமிறங்கினார்கள்.
ஒரு ரன் கூட அடிக்காமல் கோஸ்வாமி வெளியேற, பின்னர் களமிறங்கிய வார்னர் 17 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஆடிய மனிஷ் பாண்டே 24 ரன்கள் எடுக்க, கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆட தொடங்கினார். அப்பொழுது 7 ரன்கள் மட்டுமே அடித்து பிரியம் கார்க் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து ஜேசன் ஹோல்டர் களமிறங்கினார்.
இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், 19.4 ஓவரில் 132 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 50 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, அடுத்து நடக்க உள்ள போட்டியில் டெல்லி அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, நவம்பர் 10ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…