MIvDC Final: தோனி இல்லாமல் இறுதிப்போட்டியில் மோதும் மும்பை இந்தியன்ஸ்.. கோப்பையை வெல்லப்போவது யார்?

Default Image

நடப்பு ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, இரண்டாம் குவாலிபையரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைதொடர்ந்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டி யுத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7:30-க்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி, ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் தீவிர நோக்குடன் டெல்லி அணி அனைத்து போட்டிகளிலும் சுவாரசியமாக விளையாடியது. இதன் காரணமாக இன்று, கோப்பையை வெல்லும் நோக்குடன் தீவிரமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை விளையாடிய இறுதி போட்டிகள் அனைத்திலும் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியுள்ளது. அதிலும், 2018 ஆம் ஆண்டில் நடந்த இறுதி போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான புனே அணியுடன் மோதியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்