#IPL2020: வீரர்களிடையே வலம் வரும் “Break the Beard Challenge” ஆர்வமாக தாடியை எடுக்கும் வீரர்கள்!

Default Image

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், Break the Beard Challenge எனும் புதிய சவாலை ஏற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெறும்போது வீரர்கள் அனைவரும் தங்களுக்குள் வித்தியாசமான மற்றும் சுவாரசியமான சவால்களை ஏற்றுக்கொள்வார்கள். அந்தவகையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் Break the Beard Challenge எனும் புதிய சவாலை வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த Break the Beard Challenge மூலம் தங்கள் முகத்தில் உள்ள தாடியை எடுத்து, தங்களின் முகத்தோற்றத்தை மாற்றிக்கொண்டு அதனை விடியோவாக பதிவு செய்து தங்களின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றுவார்கள். அந்தவகையில், மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்டியாவின் சவாலை ஏற்ற பொல்லார்ட், தனது தாடியை எடுத்து, முகத்தோற்றத்தை மாற்றி வீடியோ வெளியிட்டார்.

மேலும் அந்த சவாலை பொல்லார்ட், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிடம் எடுக்குமாறு கூறினார். அவரின் சவாலை ஏற்ற தினேஷ் கார்த்திக், தனது தாடியை எடுத்து தனக்குள் இருக்கும் ஹீரோவை வெளிக்கொண்டு வந்தார். இந்த சவாலை அவர் சென்னை அணியில் டு ப்ளஸிஸ்க்கு விடுத்தார்.

அவரும் அதனை ஏற்றுக்கொண்டு தனது தாடியை எடுத்தார். வீரர்களின் இந்த சவால், ரசிகர்களை கவர்நது வருகிறது. மேலும், இன்றைய போட்டியிலும் யாராவது தாடியை எடுப்பார்களா? என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்