வீடியோ: மன்கட் செய்துவிடுவேன் என வார்னிங் கொடுத்த ஹர்திக் பாண்டியாவின் அண்ணன் க்ருனால்!
- ஹர்டிக் பாண்டியா வின் அண்ணன் குருநாள் பாண்டியா பஞ்சாப் வீரர் மயாங்க் அகர்வாலை மன்காட் செய்துவிடுவேன் என அவர் வார்னிங் கொடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
உலக கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த மன்காட் விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. இவையெல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினால் உருவானதுதான்.
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோஸ் பட்லரை மன்காட் செய்து வெளியேற்றினார். அந்த போட்டியில் ஜோஸ் பட்லர் அபாரமாக ஆடி 49 பந்துகளில் 63 ரன்கள் விளாசி இருந்தார். விட்டிருந்தால் சதம் அடித்து தனது ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்து இருப்பார். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயலால் இறுதியில் ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதன் பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பலராலும் விமர்சிக்கப்பட்டார். ஆனால் விதிப்படிதான் எல்லாம் நடந்தது என்று எளிதாக அதனை கடந்து சென்றுவிட்டார் அஸ்வின்.
தற்போது பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் பேட்டிங் பிடித்துக்கொண்டிருந்தனர். பந்து வீசும் திசையில் நின்றிருந்த மயாங்க் அகர்வால் க்ருனால் பாண்டியா பந்துவீசும் முன்னர் ஓட முனைந்தார்.
ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஹர்திக் பாண்டியா வின் அண்ணன் குருநாள் பாண்டியா மன்காட் செய்து விடுவேன் என்பது போல் பந்துவீசிதை நிறுத்தி விட்டு உடனடியாக அவருக்கு வார்னிங் கொடுத்தார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/BattingAtDubai/status/1111992491740459008