அஸ்வினா..? தினேஷ் கார்த்திக்கா? கொல்கத்தாவில் தமிழர்கள் மோதல்!!
- ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதே தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனை இரண்டு தமிழர்களும் கொல்கத்தா மைதானத்தில் மோதிக் கொள்கின்றனர் என கிரிக்கெட் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். இரு அணியும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய இடங்களுக்கிடையேயான போட்டிகளின் புள்ளிவிவரங்களைத் பார்ப்போம்.
- விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை: 23
- கே.கே.ஆரால் வெற்றிபெற்ற போட்டிகள்: 15
- KXIP வென்ற போட்டிகள்: 8
- முடிவுகள் இல்லை: 0
- ஈடன் கார்டன்களில் விளையாடிய போட்டிகள்: 10 (KKR வெற்றிகள் – 7, KXIP வெற்றி – 3)
- PCA ஸ்டேடியத்தில் விளையாடிய போட்டிகள்: 6 (KXIP வெற்றி – 3, KKR வெற்றிகள் – 3)
- நடுநிலை இடங்களில் விளையாடிய போட்டிகள்: 7 (KKR வெற்றி – 5, KXIP வெற்றி – 2)
- அதிக விக்கெட்: சுனில் நரைன் (கே.கே.ஆர்) – 26 விக்கெட்
- அதிக ரன்கள்: கௌதம் கம்பீர் (கே.கே.ஆர் *) – 492 ரன்