நீங்கள் ஐபிஎல் பிரியரா?சென்னையில்போட்டிகள் கிடையாது? இடம் மாற்றம்?
ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று புனேவில் இரண்டு பிளே-ஆஃப் சுற்றுகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதில், ஒரு எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 போட்டிகள் அடங்கும். மே மாதம் 23 மற்றும் 25 தேதிகளில் இப்போட்டிகள் நடக்கின்றன.
நேற்று நடந்த கமிட்டி கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த ஐபிஎல் தலைவர் ராஜிவ் ஷுக்லா, “கடந்த ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயின்டன் அணி ரன்னர்-அப் என்பதால், புனேவுக்கு முதல் உரிமையை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது” என்றார்.
மேலும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி தொடுத்துள்ள குற்றச்சாட்டுகளால், ஷமி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்பது பற்றி கூட்டத்தில் முடிவாகவில்லை. அந்த முடிவை கூட்டம் தள்ளிவைத்துள்ளதால், ஷமியின் ஐபிஎல் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.