ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு 166 ரன்களை மும்பை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
தொடக்கம் முதலே சென்னை பந்துவீச்சாளர்கள் கட்டுக் கோப்புடன் பந்துவீசினார்கள். முதல் பவர் பிளேவில் மும்பை அணி 6 ஓவர்களுக்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா 15(18), லெவிஸ் 0(2) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர், இஷான் கிஷன், யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து அடித்து விளையாடினர். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின்னர் சூர்ய குமார் யாதவ் 43(29), கிஷன் 40(29) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பாண்ட்யா சகோதர்கள் ஆட்டத்தை கையிலெடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா நிதானமாக விளையாடி 22(20) ரன்கள் எடுக்க, கருணாஸ் பாண்ட்யா 41(22) ரன்கள் குவித்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது .
இந்நிலையில் 8-வது விக்கெட்டை இழந்தது இழந்தது சென்னை அணி.ஹர்டிக் பாண்டியா வீசிய பந்தில் வுட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.பிராவோ அதிரடியாக விளையாடி 68 ரன்கள் அடித்தார்.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…