IPL 2018:சிஎஸ்கே குறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிளெமிங் …!இன்னும் ஒபனர்ஸ் கூட முடிவு செய்யல?அதிர்ச்சியில் விசில் ரசிகர்கள்…!
பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது.
இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
தொடக்க ஜோடியை இன்னும் முடிவு செய்யவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
இந்நிலையில் பயிற்சியார் ஸ்டீபன் பிளெமிங் கூறியது,இந்த சீசனில் தொடக்க வீரர்கள் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. சேம் பில்லிங்ஸ், டு பிளெஸ்ஸிஸ், சோரே, முரளி விஜய், ஷேன் வாட்சன், அம்பாட்டி ராயுடு உள்ளிட்ட 6 தொடக்க பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.
அணி சேர்க்கை மற்றும் சூழ்நிலையின் அடிப்படையிலேயே தொடக்க ஜோடியை முடிவு செய்வோம். அணி சேர்க்கை என்பது தொடக்க ஜோடிக்கு மட்டும் அல்ல மற்ற வரிசைக்கும் சேர்த்துதான் அமையும். தோனி இந்த சீசனில் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று பயிற்சியார் ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.