வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தெலுங்கு மொழிக்கு விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரைப்பட இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், அவ்வப்போது சின்ன திரையிலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். பிக் பாஸ் தெலுங்கில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது, தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தெலுங்கு மொழியில் ஒளிப்பரப்பாகும் சானலில் இவர்தான் விளம்பர தூதர் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இம்முறை தெலுங்கிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.
ஸ்டார் நிறுவனம் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கலந்து கொண்டு உரையாட உள்ளார்.
தனக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் என்றால் விருப்பம் எனவும், சச்சின் தனது அபிமான விளையாட்டு வீரர் எனவும் ஜூனியர் என்.டி.ஆர் தெரித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…