மிரட்டல் சாதனை..! ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது ஷமி.!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். நேற்று சென்னைக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் முகமது ஷமி அருமையாக பந்து வீசினார் என்றே கூறலாம்.
அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் 10 வீரர்களின் பட்டியலில் ஷமி இணைந்துள்ளார். 32 வயதான அவர் 94 போட்டிகளில் விளையாடி 100 ஐபிஎல் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மேலும், நேற்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியை தொடர்ந்து குஜாத் அணி அடுத்ததாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் வரும் 4-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.