இணையத்தை கலக்கும் நடுவர்..! யார் இந்த பெண் நடுவர் தெரியுமா.?
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நடுவராக இருக்கும் பெண் நடுவர் சுப்தா போஸ்லே கெய்க்வாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் வீரர்கள் பங்குபெறும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் இந்த லீக்கில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் முற்றிலும் பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இப்போது நாம் பேசப்போவது வீரரைப் பற்றிஅல்ல, தற்போது இணையத்தில் வைரலான பெண் நடுவரைப் பற்றி.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நடுவராக இருப்பவர் சுப்தா போஸ்லே கெய்க்வாட். இவர் இந்தியாவின் இளம் பெண் நடுவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்நிலையில், சுப்தா போஷ்லே கெயிக்வாட் புகைப்படன் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவரை ஐபிஎல் தொடருக்கும் நடுவராக நியமிக்க வேண்டும் என கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சுப்தா போஸ்லே கெய்க்வாட் மட்டும் பெண் நடுவர் அல்ல மொத்தம் 4 பெண் நடுவர்கள் உள்ளனர். அவர்களில் சுப்தாவும் ஒருவர். மேலும் மூன்று பெண் நடுவர்கள் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள். சுப்தா மற்ற மூன்று நடுவர்களை விட இளையவர். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் சுப்தா.
ஜபுவா மாவட்டத்தில் உள்ள கல்லூரி விளையாட்டு அதிகாரியாக சுப்தா உள்ளார். இவரின் தந்தை கிரிக்கெட் பயிற்சியாளர். மத்திய பிரதேச அணிக்காக U 16, U 19 தொடர்களில் விளையாடிய சுப்தா. பின்னர், அம்பயரிங்கில் O பிரிவை முடித்து கடந்த 2012ம் ஆண்டு முதல் உள்நாட்டு தொடர்களுக்கு நடுவராக பணியாற்றி வருகிறார்.
லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப், இர்பான் பதான், யூசுப் பதான், பாகிஸ்தானின் சோயிப் அக்தர், மிஸ்பா உல் ஹக், இலங்கையின் ஜெய் சூர்யா, முத்தையா முரளிதரன், டேரன் சமி, ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர் என கூறப்படுகிறது.