வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தேர்வு.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன், பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கின. இந்திய அணிக்கு இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
தொடக்கம் முதல் சுப்மன் கில் அதிரடியாக விளையாட கேப்டன் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆதிரடியாக ஆடிய சுப்மன் கில், 36 பந்தில் அரைசதம் எட்டிய நிலையில், மறுமுனையில் தவான், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்த போது சுப்மன் கில் 64 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்த போது, தவான் (97 ரன்னில்) சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். பொறுப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து, 54 ரன்னில் அவுட்டானார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 308 ரன்களை குவித்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை பொறுத்தவரை அல்சாரி ஜோசப், மோட்டி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திருந்தனர்.
இதையடுத்து, கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. அதாவது 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 305 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தளவில் முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 75, பிராண்டன் கிங் 54, ஷமர் ப்ரூக்ஸ் 46 ரன்கள் எடுத்திருந்தன. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…