வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யபட்ட நிலையில், இவருடன் சேர்ந்து களமிறங்கும் ரோஹித் சர்மா.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடைபெற உள்ளது.
அதன்படி, முதலில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய – வெஸ்ட் இண்டீஸ் மோதவுள்ளன. முதல் ஒருநாள் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இதற்காக தீவிர வலைப்பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இஷான் கிஷானுடன் சேர்ந்து பேட்டிங்கை தொடங்குவேன் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது. இவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் நாளை நடைபெற உள்ள ஒருநாள் போட்டியில் பங்குபெறலாம் என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக இஷான் கிஷானுடன் சேர்ந்து பேட்டிங்கை தொடங்குவேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்.), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…