இந்தியா – வேஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மோதும் 3வது டி20 போட்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாகி இன்று 9.30 மணிக்கு 3வது டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகள் முடிந்து விட்டன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி எட்டு மணிக்கு ஆரம்பமாகும் என கூறப்பட்ட நிலையில், வீரர்கள் தயாராக கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்பதால், தற்போது ஒன்றரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு இந்த டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது. போட்டி முடிய நள்ளிரவு 1 மணியை தாண்டிவிடும்.
இதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது போட்டி ஆரம்பித்த பின்னர்தான் தெரியவரும்.
ஏற்கனவே நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடத்த வெஸ்ட் இண்டீஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை போட்டியில் பங்கேற்கும் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு அமெரிக்கா விசா கிடைக்காமல் இருக்கிறது. அதன் காரணமாக ஒருவேளை நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் தொடர அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…