3வது டி20 போட்டி இன்னும் சில மணிநேரங்களில்… 4வது 5வது டி20 நடப்பதில் சிக்கல்….
இந்தியா – வேஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மோதும் 3வது டி20 போட்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாகி இன்று 9.30 மணிக்கு 3வது டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகள் முடிந்து விட்டன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி எட்டு மணிக்கு ஆரம்பமாகும் என கூறப்பட்ட நிலையில், வீரர்கள் தயாராக கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்பதால், தற்போது ஒன்றரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு இந்த டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது. போட்டி முடிய நள்ளிரவு 1 மணியை தாண்டிவிடும்.
இதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது போட்டி ஆரம்பித்த பின்னர்தான் தெரியவரும்.
ஏற்கனவே நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடத்த வெஸ்ட் இண்டீஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை போட்டியில் பங்கேற்கும் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு அமெரிக்கா விசா கிடைக்காமல் இருக்கிறது. அதன் காரணமாக ஒருவேளை நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் தொடர அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.