ZIMvIND : ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் இன்று நடைபெற இருக்கும் கடைசி போட்டியான 5-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ரியான் பராக் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரில் ஏற்கனவே, 4 போட்டிகள் முடிவடைந்துவிட்டது. அந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகள் வென்ற நிலையில், ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக தொடரை இந்திய அணி 3-1 என தற்போது கைப்பற்றி உள்ளது.
நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 53 பந்துக்கு 93* ரன்களும், கில் 39 பந்துக்கு 58* ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்த டி 20 தொடரின் 5-வது டி20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள கடைசி போட்டியில் கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றி விட்டாலும் கூட, அணியில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக அவருக்கு பதிலாக ரியான் பராக்க்கு வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ZIMvIND இன்று விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் :
ஜிம்பாப்வே அணி
வெஸ்லி மாதேவெரே, இன்னசென்ட் கையா, பிரையன் பென்னட், சிக்கந்தர் ராசா (c), டியான் மியர்ஸ், ஜோனாதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே (wk), வெலிங்டன் மசகட்சா, லூக் ஜாங்வே, பிளெஸ்ஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா
இந்திய அணி
சுப்மன் கில் (c), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரியான் பராக், சஞ்சு சாம்சன் (wk), ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய்
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…