INDvsWI: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.
மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் போட்டி ட்ராவில் முடிந்ததால் இந்திய அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது.
அடுத்ததாக ஒருநாள் தொடர் வரும் 27 ஆம் தேதி பார்படாஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணி: ஷாய் ஹோப் (C), ரோவ்மன் பவல் (VC), அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ தாமஸ் ஷெப்பர்ட், கெவினி தாமஸ் ஷெப்பர்ட்.