INDvsWI:இந்திய அணி திணறல்..! ஏமாற்றிய புஜாரா, கோலி ..!

Default Image

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது .

Image

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் , ரோகித் சர்மாமற்றும் குல்தீப் ஆகியோர் இடம்பெறவில்லை.ஆனால் விஹாரி , ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்தனர். போட்டி  மழை காரணமாக 15 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் ,மயங்க் அகர்வால் இருவரும்  களமிறங்கினர். வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சில் இருவரும் தடுமாறினார். இதையடுத்து மயங்க் அகர்வால் 5 , புஜாரா 2 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய  கேப்டன் விராட்கோலி 9 ரன் உடன்  வெளியேற இந்திய அணி 7.5 ஓவரில் 25 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

Image

பின்னர் ராகுல் , ரஹானே இருவரும் அணியை சரிவில் இருந்து  மீட்டு வந்தனர். இந்திய அணி 93 ரன்கள் எடுத்திருந்தபோது கே. எல் ராகுல் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர்  ரஹானே நிதானமாக விளையாடி அரைசதம் விளாசி  81 ரன்கள் எடுத்தபோது கேப்ரியல் பந்தில் ரஹானே போல்டானார்.

Image

நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரிஷாப் பண்ட்  20 , ஜடேஜா 3 ரன்களுடன் உள்ளனர்.இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
IPL 2025 Ceremony
Senthil Balaji annamalai
Rowdy john muder - 3 person encounter
veera dheera sooran S. J. Suryah
Nagpur Violence
chennai budget