இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரஹானே 81 ரன்கள் குவித்தார்.இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கிரெய்க் பிராத்வைட் தொடக்கத்திலேயே 14 ரன்களுடன் வெளியேற இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்நிலையில் 75 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 16 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் இறங்கிய புஜாரா , கே.எல் ராகுல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்ந்தனர்.
அணியின் எண்ணிக்கை 73 ஆக இருந்த போது கே.எல் ராகுல் 38 ரன்களுடன் வெளியேறினார். இதைத் தொடர்ந்து கேப்டன் கோலி, துணைக்கேப்டன் ரஹானே இருவரும் கைகோர்க்க சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்.
கேப்டன் கோலி 51 ரன்னில் வெளியேற பின்னர் முதல் இன்னிங்ஸை போல நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய துணைக்கேப்டன் ரஹானே அணியின் எண்ணிக்கை 336 ரன்கள் இருக்கும் போது 102 ரன்கள் எடுத்து வெளியேறினார்.இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ரஹானே தனது 10-வது சதத்தை நிறைவு செய்தார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…