இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரஹானே 81, ராகுல் 44 ரன்கள் குவித்தார்கள்.இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கிரெய்க் பிராத்வைட் தொடக்கத்திலேயே 14 ரன்களுடன் வெளியேற , மத்தியில் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 48 ரன்கள் குவித்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இசாந்த் சர்மா 5 , முகமது ஷமி ,ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் 75 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் 16 , கே.எல் ராகுல் 38 ரன்களுடன் வெளியேறினர். இதைத் தொடர்ந்து கேப்டன் கோலி, துணைக்கேப்டன் ரஹானே இருவரும் கைகோர்க்க சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்.
கேப்டன் கோலி 51 ரன்னில் வெளியேற பின்னர் ஹனுமா விஹாரி ,துணைக்கேப்டன் ரஹானே இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.முதல் இன்னிங்ஸை போல நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய துணைக்கேப்டன் ரஹானே 102 ரன்கள் எடுத்து வெளியேறினார்.இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ரஹானே தனது 10-வது சதத்தை நிறைவு செய்தார்.
சிறப்பாக விளையாடி வந்த ஹனுமா விஹாரி 93 ரன்கள் எடுத்து 7 ரன்னில் சதம் வாய்ப்பை இழந்தார்.இந்திய அணி 343 ரன்கள் இருக்கும் போது டிக்ளர் செய்தது இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டர்.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டம் தொடக்கத்திலேயே இருந்து இந்திய அணி பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் வரிசையாக விக்கெட்டை இழந்தார்கள். இதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
அப்போது 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கெமர் ரோச் அதிகபட்சமாக 38 ரன்கள் குவித்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 26.5 ஓவரில் 100 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதன் மூலம் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்து வீச்சில் பும்ரா 5 , இசாந்த் சர்மா 3 , முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…