INDvsSLT20SERIES: டாஸ் வென்று இந்தியா முதலில் பந்துவீச்சு.!
இந்தியா-இலங்கை மோதும் இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு.
இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. புனேவில் இன்று இரு அணிகளுக்கிடையே இரண்டாவது டி-20 போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி: இஷான் கிஷன்(W), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(C), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(வ), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்சா, தசுன் ஷனகா(சி), வனிந்து ஹசரங்கா, சமிக்கா கருணாரத்னா, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜிதா, டில்ஷான் மதுஷங்கா