INDvsSLT20SERIES: இந்தியா-இலங்கை, புனேவில் இன்று 2-வது டி-20 போட்டி.!
இந்தியா-இலங்கை மோதும் இரண்டாவது டி-20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது.
இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் மும்பையில் நடந்த முதல் டி-20யில் இந்திய அணி, வென்றுள்ளதால் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது டி-20 போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை இழக்காமலிருக்க இலங்கை அணியும் களமிறங்குகிறது. மேலும் முதல் போட்டியின்போது முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சஞ்சு சாம்சன், இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
முதல் போட்டியில் விளையாடாத அர்ஷ்தீப் சிங், இன்னும் காயம் முழுதும் குணமடையாததால் இந்த போட்டியில் விளையாடுவதும் சந்தேகமாகியுள்ளது, மேலும் சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிபாதி க்கு இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.