INDvsSLT20SERIES: இந்திய அணிக்கு 206 ரன்கள் இலக்கு.! 3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 27
இந்தியா-இலங்கை மோதும் இரண்டாவது டி-20யில் இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் குவிப்பு.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டி-20 போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குசல் மெண்டிஸ்(52 ரன்களும்), பதும் நிஸ்ஸங்கா(33ரன்களும்) இருவரும் சேர்ந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்ந்த இந்த ஜோடி அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க, சரித் அசலங்கா நிலைத்து நின்று ஆடி ஓரளவு ரன்கள் சேர்த்தார், அவர் 37 ரன்கள் எடுத்த நிலையில் உம்ரன் மாலிக்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு தசுன் ஷனகா கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் இலங்கை அணி, 20 ஓவர்களில் விக்கெட்களை இழந்து 206 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பில் உம்ரன் மாலிக் 3 விக்கெட்களும், அக்சர் படேல் 2 விக்கெட்களும்,சாஹல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை எடுத்துள்ளது.