INDvsSL T20SERIES: 12 ஓவர்களில் இந்தியா 86/4 ரன்கள் குவிப்பு.!
இந்தியா-இலங்கை மோதும் முதல் டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்தியா 10 ஓவர்களில் 86/3 ரன்கள் குவிப்பு.
இந்தியா-இலங்கை மோதும் முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், இன்று அறிமுகமான சுப்மன் கில், 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் 7 ரன்களும், சாம்சன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸரங்கா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 24* ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.