இந்தியா-இலங்கை மோதும் முதல் டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 162 ரன்கள் குவிப்பு.
இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பௌலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், விக்கெட்கள் ஒருபக்கம் விழுந்த வண்ணம் இருந்தது. இன்றைய போட்டியில் அறிமுகமான சுப்மன் கில், 7 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் 7 ரன்களும், சாம்சன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸரங்கா பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். மறுபுறம் ஹர்டிக் பாண்டியா 29 ரன்களில் தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி ஓவர்களில் அக்சர் படேல்(31*ரன்கள்) மற்றும் தீபக் ஹூடா(41* ரன்கள்) அதிரடியாக விளையாடி சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளை அடித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினர். முடிவில் இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…